
என் ஆயுள் உள்ளவரை தீராதே
மாறாதே காதல் மாறாதே
நான் சாகும் நிலைவரை மாறாதே
உனக்கெனத் தானே உயிர் வளர்த்தேன்
உனக்கது தெரியாதா?
உனக்கென நானும் யாதும் செய்வேன்..
உனக்கது புரியாதா?
தீயில் நீயும் படுக்கச் சொன்னால்
நொடியில் சாம்பல் துகளாவேன்..
கடலில் நீயும் குதிக்கச் சொன்னால்
கணத்தில் கரையில் ஒதுங்கிடுவேன்..
எதையும் உனக்கென இழப்பேனே
உன்னை மட்டும் முடியாதே..
எதையும் மறந்து தொலைப்பேனே
உன்னை மட்டும் முடியாதே..
கண்ணுக்குள்ளே தானே விதையாகி
நெஞ்சுக்குள்ளே வேரானாய்..
மண்ணுக்குள்ள போற காலமட்டும்
மனசெல்லாம் நீதானே..
கனவில் வந்து கைது செய்து
நினைவின் சிறையில் நீய்டைத்தாய்
உணர்வில் உயிரில் கலந்து விட்டு
உடலில் மட்டும் தனித்திருந்தாய்
நெஞ்சே நீயும் மறுக்காதே
தஞ்சம் நீ மறவாதே
நினைவே நீயும் வெறுக்காதே
உயிரும் பிழைக்காதே
உன்னை விட்டு விலகி வரும் வெற்றி
தோல்விக்கு சமம்தானே
உன்னோடு சேர்ந்து வரும் தோல்வி
வெற்றிக்கு மேல்தானே..