Sunday, January 31, 2010

34.நீயும் எங்கே


கிழக்கென வந்த திசையும் நீதான்..
எனக்கென வந்த இசையும் நீதான்..
குடையென வந்த இமையும் நீதான்
விழியும் நீதான்..

மழையென வந்து நனைத்தே சென்றாய்..
நிலமென வந்து தாங்கியும் நின்றாய்.. 
இதயத்தை ஏன் காயம் செய்தாய்? 
மாயம் செய்தாய்? 

அன்பே அன்பே உன்னால் இங்கே 
உயிர் கரைந்தேனே மறைந்தேனே 
எங்கே எங்கே நீயும் எங்கே 
மனம் பதைத்தேனே தவித்தேனே 

அழகே உன் அன்பில் மாட்டிக் கொண்டேன்
விடுபடத்தானே விரும்பவில்லை..
உறவே உன் ஒற்றை வார்த்தை சொல்வாய் 
ஒரு நொடி நானும் உயிர்த்தெழுவேன்.. 

என்னதான் செய்வாய்?
எதைத்தான் சொல்வாய்? 



நமக்கிடையே இரகசியம் இல்லை 
அதற்கான அவசியம் இல்லை 
என்றெல்லாம் சொல்லிச் செல்லும் 
எண்ணமில்லை.. 

கைகோர்த்து நடக்கவும் இல்லை 
தோள்சாய்ந்து தூங்கவும் இல்லை 
பாதச் சுவடை தொடரவும் இல்லை
இருந்தும் தொல்லை.. 

அருகே வந்தாய் அவஸ்தைகள் தந்தாய் 
எதிரே நின்றே இம்சித்தாய்..
உறவாய் வந்தாய் உயிரைத் தின்றாய் 
இரவில்தானே நெருங்குகிறாய்.. 

உன் முன் என் அத்தனை பலமும் தோற்கும் 
அதை மனமும் ஏற்கும்.. எனை ஈர்க்கும்.. 
கண்ணெதிரே வந்து நின்றால் போதும் 
காயங்கள் ஆறும் கவியூரும்..

என்னதான் சொல்வாய்? 
எதைத்தான் செய்வாய்?  

33.உனைவிட்டு வேறிடம்?


உன் கைப்பிடித்து நடந்தாலே 
என் பயணங்கள் நீளும் 
உன் நிழல் விட்டு பிரிந்தாலே 
என் ஜீவன் நோகுமே.. 

திரும்பப் பெற்றுக் கொள்ள 
இதயம் என்ன வெறும் பொருளா? 
விரும்பி தந்து செல்ல 
அதுவும் என்ன பரிசுப் பொருளா? 

வெறும் பொருளுமில்லை..
பரிசுப் பொருளுமில்லை.. 

உயிர்த்திரள் அதில் 
உனக்களித்தேன் ஓரிடம்..
இனி நானிங்கு செல்வேன் 
உனைவிட்டு வேறிடம்? 

Friday, January 29, 2010

32. சின்ன வானம்


என்ன என்ன நான் சொல்வேன் 
அட நானும் நானில்லை..
உன்னை உன்னை நான் கண்ட
முதல் நாளும் வீணில்லை..
முன்னும் பின்னுமாய் சுற்றும்
ஒரு பூமி ஏனில்லை.. 

ஒரு திட்டமின்றி வட்டமின்றி 
தொட்ட தென்றல் நீயா ?
என் நீயா?  எனக்கே வந்தாயா?  
நீயா ஒரு தீயா? 

உன் மனதாலே என்னை 
முழுதாய் அடைந்தாயே 
உன் சிரிப்பாலே என்னை 
நுரையாய் உடைத்தாயே.

வாயாடி பெண் என்னைத் தோற்கடித்தாயே 
தேயாத நிலவென்னை சிறைபிடித்தாயே   
ஓயாத நினைவில் நீ  மூழ்கடித்தாயே 
பாயாத வெள்ளத்தின் வேகம் குறைத்தாயே.. 

சிறகு ஒன்று ஈந்தாய் 
பறக்க கற்று தந்தாய் 
பிறகு எங்கு சென்றாய்?
உருகுதே என் நொடியும் 
பெருகுதே என் வலியும்.. 

கண்ணில் காணும் யாவுமே 
அழகானதே  பொதுவா?
சின்ன சின்ன கனவுகள் 
கைகூடும் நாள் இதுவா?

உன்னை விதையாய் ஒளித்து
வைத்தேன் விருட்சமானாய்.. 

யாரைச் சொல்லுவேன் நானும் 
நானாக நானில்லை 
உன்னைக் கண்டதன் பின்னே 
தேனும் தேனில்லை..
எல்லை ஏதுமே கொண்ட 
வானம் வானில்லை.. 

எந்தன் கண்ணில் நீயும் 
சின்ன வானம் போலே 




Wednesday, January 27, 2010

31. யாவும் நீயாய்

வீசும் காற்றே வீசும் காற்றே 
கவிதை சொன்னாய் காதில் நேற்றே 
கனவில் நீயும் வந்த சுவடை 
கழற்றி நானும் பதுக்கினேன்.. 


மூங்கிலின் இலையினை 
யாழெனவே மீட்டினாய் 
பூக்களின் இதசகளில் 
அனலினை மூட்டினாய்
அன்பே 
மழை தூறல் நீ..மண் வாசம் நீ  
என் காலை நீ..என் சோலை நீ 
என் தேடல் நீ..என் பாடல் நீ 
உன்னோடுதான் என் இன்பமே.. 
நெஞ்சே
என் வானம் நீ..என் மேகம் நீ 
என் தாகம் நீ.. என் மோகம் நீ 
என் வேகம் நீ.. என் ராகம் நீ 
என சொல்லவா என் செல்லமே.. 


உன்னைக் காண எந்தன் மனமும் 
ஏங்கிக் கிடக்கும் மர்மமென்ன? 


யாரும் வேண்டாம் தனிமை கொண்டேன் 
யாவும் நீயாய் வந்து நின்றாய் 
என் செய்வேனோ? எனை வைவேனோ? 
கண்களே கண்களே ஏன் திரியானது? 
என் மனம என் மனம ஏன் எதிரானது? 
உன் சொல்லும் என் சொல்லும் அட புதிரானது.. 
அழகே 
உன் வார்த்தையில் உன் நேர்த்தியில் 
உன் செய்கையில் உன் பொய்களில் 
சிறு சண்டையில் ஒரு கூடலில் 
என் சிந்தையில் நீ ஊறினாய்..
பொடியா 
உன் இளமையில் உன் இனிமையில் 
உன் பொறுமையில் உன் திறமையில் 
உன் நெருக்கத்தில் உன் ரசனையில் 
என் தனிமையை நீ பருகினாய்.. 


30.உன் மழை தீண்டுமா?

இசையென இசையென 
இதயமே வருடினாய் 
இமைகளைத் திருடியே போனாயே..

உன் விழி மோதினேன் 

தாய் மொழி தேடினேன் 
என் வழி மாறினேன்.. 

உன் மழை தீண்டுமா?  

என் நிலம் பூக்குமா? 
புது திசை தோன்றுமா?  

முன் தினம் பார்த்ததில் 

நரம்புகள் வேர்க்குதே..
அனுதினம் அருகிலே வேண்டுகிறேன்..  

சிறு ஊடல் கொள்ள 

பெரும் கூடல் கொள்ள 
வரும் நாள் பார்க்கிறேன்.. 

நீளும் பாடல் செய்தேன்.. 

நாளும் கவிதை செய்தேன் 
காதல் விதை தூவினேன்.. 

உன் குரல் சுமந்திடும் 

வரமொன்று தந்திடு
.உன் நிலம் தாங்கிடும் நிலமாவேன்.. 

என் நிலை மாற்றினாய்..

உயிர் சிலையாக்கினாய்.. 
வந்து கடைத்தேற்றுவாய்.. 

ஒரு மழையுமில்லை... 

சுடும் வெயிலுமில்லை.. 
ஏன் குடையாக்கினாய்? 

Monday, January 25, 2010

29. உயிரின் கொடி

நினைவின் பிடியில் ஒரு பாடல்
நிலவின் மடியில் சிறு தேடல்

அழகே நீ அன்பின் வடிவா?
உறவே நீ உன்னத கலையா?
மனமே உன் மௌனமும் சரியா?
பொடியா..உயிரின் கொடியா?

தினம் இரவில் நீ வருவாய்..
என் சன்னலில் பிறை நீயே
தினம் கனவில் நீ வருவாய்
அலைகடலின் கரை நீயே
தினம் உயிரில் போர் புரிவாய்
என் ஆயுளின் வரை நீயே

காரணங்கள் ஏதுமில்லை
காதல் சொல்ல நேரமில்லை
தோரணங்கள் தேவையில்லை
வார்த்தை சொன்னால் பாரம் இல்லை

கடக்கிற நிமிடத்தின் சிறு பதிவே வா
துடிக்கிற இதயத்தின் கதை அறிவாயா?
கவனத்தை சிறைகொண்ட
பெருமழை நீதானா?

உன் தூண்டலில் சொல் பூக்குதே
பறித்துச் செல்ல இரவாய் வந்தாய்
உன் தீண்டலில் செல் பூக்குதே
தள்ளி நின்று என்னைக் கொன்றாய்

உறக்கத்தை விட்டு மாதங்கள் ஆக
வரப்பினில் நின்று பாதங்கள் நோக
பயணத்தில் எதிர்ப்படும்
மரநிழல் நீதானா?

28. நாம் நாமாகிறோம்

நான் நிலமில்லை நீ மழையில்லை 
நான் மலரில்லை நீ மணமில்லை 
நான் நிலவில்லை நீ இரவில்லை 
நான் நிஜமில்லை நீ நிழலில்லை 
நான் நீயில்லை நீ நானில்லை..


நான் விழுகையில் நீயும் தாங்குகிறாய் 
நாம் நிலம் நாம் மழை 
நான் தொட்டாலும் நீ மலர்கிறாய் 
நாம் மலர் நாம் மனம்


நான் இருளானால் நீ ஒளியாகிறாய்  
நாம் நிலவு நாம் இரவு 
நான் நிழலானால் நீ நிஜமாகிறாய் 
நாம் நிழல் நாம் நிஜம்.. 


நான் நானாகிறேன்.. 
நீ நீயாகிறாய்.. 
நாம் நாமாகிறோம்.. 

27. பொடியா

பொடியா பொடியா பொடிப் பொடியா
மனதில் நுழைந்தாய் பொடி நடையாய்..
கொடியா கொடியா செடி கொடியா
எனக்கே வளர்ந்தாய் நிழற் குடையாய்..

நொடியா நொடியா முதல் நொடியா
கண்டதும் பிடித்தது மறு நொடியா
வெடியாய் வெடியாய் சர வெடியாய்
கவிதைகள் தந்தாய் முரண் தொடையாய்..

படையாய் படையாய் போர்ப் படையாய்
போர்கள் செய்கிறாய் இது சரியா?
தடையா தடையா பெரும் தடையா
கேள்விக்கு சொல்வாய் ஒரு விடையாய்..

குறையா குறையா நிறம் குறையா
சொல்லித் தொலையேன் ஒரு வழியாய்..
முறையாய் முறையாய் வரை முறையாய்
ஒரு வார்த்தை சொல்லேன் மன நிறைவாய்..

விழியா விழியா அகல் விழியா
தெரிந்தேன் விழுந்தேன் கரு மணியாய்..
வழியா வழியா வழி வழியாய்
உன்னைத் தொடர்நதால் அது பிழையா..

மழையாய் மழையாய் தேன் மழையாய்
முழுவதும் நனைத்தாய் துளித் துளியாய்..
விளைவாய் விளைவாய் அதன் விளைவாய்
பூத்தேன் நானும் ஒரு மலராய்..

தரமாய் தரமாய் நிரந்தரமாய்
எனக்கே கிடைத்தாய் ஒரு வரமாய்..
இரவாய் இரவாய் நள்ளிரவாய்
பேசிட வந்தாய் பொன்னிலவாய்..

மறைவாய் மறைவாய் மன நிறைவாய்
நேசமே வந்தாய் நல்லுறவாய்
அலையாய் அலையாய் தொடர் அலையாய்
விழுந்தேன் மிதந்தேன் ஒரு இலையாய்..

கலையாய் கலையாய் ஒரு கலையாய்
ரசித்தாய் புசித்தாய் இது நிலையா?
நினைவாய் நினைவாய் உன் நினைவாய்
உயிரும் இயங்குது இது கனவா?

அழகாய் அழகாய் மனம் அழகாய்
இயற்கை படைத்தது உன்னை முழுதாய்
விழுதாய் விழுதாய் ஆல் விழுதாய்
என்னில் விழுந்தே எனை உழுதாய்.. 

Friday, January 22, 2010

26. கனவைத் திற

என் பயணத்தில் நீ வசந்தம்.
என் கவிதைக்குள் நீ சந்தம்.. 


உன்னை ஏன் பிடிக்கிறது?
உன்னில் என்ன பிடிகிறது?


உன் வாசமா? உன் நேசமா?
உன் எண்ணமா? உன் வண்ணமா?
உன் வேகமா? உன் தாகமா?
உன் தட்பமா? உன் நுட்பமா?
எதுவென்று சொல்லுவேன்? 



நேசத்தின் வாசமே 
எண்ணத்தின் வண்ணமே 
தாகத்தின் வேகமே 
நுட்பத்தின் தட்பமே.. 


கதவைத் திற காற்று வரட்டும் 
கனவைத் திற காதல் வரட்டும் 
கண்களைத் திற காயம் ஆறட்டும்.. 

25. கண் மூடு..

என் கண்களுக்குள்
உன்னை ஊற்றியிருந்தேன்..
என் இதயத்திற்குள் உறைந்தாய்..

என் இதயத்திற்குள்
வேர் பிடித்திருந்தாய் - அதை
என் கண்கள் பூக்க உணர்ந்தாய்..

கண் மூடும் முன்
என்னருகே வந்து விடு..
மண் மூடும் முன்
உன்னை நீயே தந்து விடு..
 

கண் மூடினாலும் இமைகளால்
உன்னை எதிர்பார்ப்பேன்..
மண் மூடினாலும் இலைகளால்

உனக்கு நிழல் சேர்ப்பேன்..



நான் பேசுவதெல்லாம் உளறல்
நான் பார்ப்பதெல்லாம் கானல்..
நான் நடப்பதெல்லாம் கோணல்..

மெதுவாய் மெதுவாய் கரைகிறேன்..
உனக்குள் தானே உறைகிறேன்..
உன்னைக் கண்டால் மறைக்கிறேன்..
தனியே நான் ஏன் சிரிக்கிறேன்..

நீ அங்கே நான் இங்கே 

பார்ப்போம் ஒரே காட்சியை..

24. உயிரே நில்லடி..



உனக்கும் என்னைப் பிடிக்கிறதா?
இதயம் சொல்ல மறுக்கிறதா?
இமைகள் கொஞ்சம் சிரிக்கிறதா?
உண்மை சொல்லடா..

உன் நெஞ்சத்திற்குள் நிழல் இல்லை..
என் நெஞ்சமொன்றும் புழல் இல்லை.

பசித்திருக்கும் மனதுக்கு
என்ன சொல்லப் போகிறாய்?
விழித்திருக்கும் இரவுக்கு
என்ன தர போகிறாய்?

வளர்வதெல்லாம் வளர்ச்சி அல்ல..
தேய்வதெல்லாம் வீழ்ச்சி அல்ல..
உன் தாகம் ஆறாய் பாயட்டும்..
என் தேகம் மெல்ல தேயட்டும்..

கனவினில் மிதக்க வா
கைகளால் தவழ வா
கண்களில் நுழைய வா
நீ அனுமதி கேட்டது..
அதை நான் ஏன் மறுப்பது?

எனக்கும் உன்னைப் பிடிக்கிறது..
இதயம் சொல்ல துடிக்கிறது
இருந்தும் ஏதோ தடுக்கிறது..
உயிரே நில்லடி.
.

Wednesday, January 20, 2010

23. இமை தொடு

அடை மழை காலமா?
அனல் தொடும் நேரமா?
இறக்கவா? பிறக்கவா?
சொல்வாய் நீயே..

பார்வைகள் போதுமா?
ஸ்பரிசங்கள் போதுமா?
ஒருமுறை உயிர் தொட
வருவாய் நீயே..

உன் குரல் மதுரமா?
உன் மொழி மதுரமா?
அறிந்திட துடிக்கிறேன்
எனக்குள் நானே..

இமை தொடும் போதிலா?
இதழ் தொடும் போதிலா?
மயங்கியே சரிகிறேன்
உன்னால் தானே..

போனவை போகட்டும்
புதிதாய் பிறப்பேடு
முழுதாய் வாழ்ந்திட

முயல்வோம் நாமே..