
நிலவின் மடியில் சிறு தேடல்
அழகே நீ அன்பின் வடிவா?
உறவே நீ உன்னத கலையா?
மனமே உன் மௌனமும் சரியா?
பொடியா..உயிரின் கொடியா?
தினம் இரவில் நீ வருவாய்..
என் சன்னலில் பிறை நீயே
தினம் கனவில் நீ வருவாய்
அலைகடலின் கரை நீயே
தினம் உயிரில் போர் புரிவாய்
என் ஆயுளின் வரை நீயே
காரணங்கள் ஏதுமில்லை
காதல் சொல்ல நேரமில்லை
தோரணங்கள் தேவையில்லை
வார்த்தை சொன்னால் பாரம் இல்லை
கடக்கிற நிமிடத்தின் சிறு பதிவே வா
துடிக்கிற இதயத்தின் கதை அறிவாயா?
கவனத்தை சிறைகொண்ட
பெருமழை நீதானா?
உன் தூண்டலில் சொல் பூக்குதே
பறித்துச் செல்ல இரவாய் வந்தாய்
உன் தீண்டலில் செல் பூக்குதே
தள்ளி நின்று என்னைக் கொன்றாய்
உறக்கத்தை விட்டு மாதங்கள் ஆக
வரப்பினில் நின்று பாதங்கள் நோக
பயணத்தில் எதிர்ப்படும்
மரநிழல் நீதானா?
No comments:
Post a Comment