Sunday, January 31, 2010

34.நீயும் எங்கே


கிழக்கென வந்த திசையும் நீதான்..
எனக்கென வந்த இசையும் நீதான்..
குடையென வந்த இமையும் நீதான்
விழியும் நீதான்..

மழையென வந்து நனைத்தே சென்றாய்..
நிலமென வந்து தாங்கியும் நின்றாய்.. 
இதயத்தை ஏன் காயம் செய்தாய்? 
மாயம் செய்தாய்? 

அன்பே அன்பே உன்னால் இங்கே 
உயிர் கரைந்தேனே மறைந்தேனே 
எங்கே எங்கே நீயும் எங்கே 
மனம் பதைத்தேனே தவித்தேனே 

அழகே உன் அன்பில் மாட்டிக் கொண்டேன்
விடுபடத்தானே விரும்பவில்லை..
உறவே உன் ஒற்றை வார்த்தை சொல்வாய் 
ஒரு நொடி நானும் உயிர்த்தெழுவேன்.. 

என்னதான் செய்வாய்?
எதைத்தான் சொல்வாய்? 



நமக்கிடையே இரகசியம் இல்லை 
அதற்கான அவசியம் இல்லை 
என்றெல்லாம் சொல்லிச் செல்லும் 
எண்ணமில்லை.. 

கைகோர்த்து நடக்கவும் இல்லை 
தோள்சாய்ந்து தூங்கவும் இல்லை 
பாதச் சுவடை தொடரவும் இல்லை
இருந்தும் தொல்லை.. 

அருகே வந்தாய் அவஸ்தைகள் தந்தாய் 
எதிரே நின்றே இம்சித்தாய்..
உறவாய் வந்தாய் உயிரைத் தின்றாய் 
இரவில்தானே நெருங்குகிறாய்.. 

உன் முன் என் அத்தனை பலமும் தோற்கும் 
அதை மனமும் ஏற்கும்.. எனை ஈர்க்கும்.. 
கண்ணெதிரே வந்து நின்றால் போதும் 
காயங்கள் ஆறும் கவியூரும்..

என்னதான் சொல்வாய்? 
எதைத்தான் செய்வாய்?  

No comments:

Post a Comment