
உனக்கேன் புரியவில்லை..
உன் பிம்பம் நெஞ்சில் நிலைத்ததடா
மீண்டெழ வழியுமில்லை..
என் கனவுகள் உன்னை அழைக்குதடா
நீயதை அறிவாயா?
என் கவிதைகள் உன்னால் பிழைக்குதடா
உனக்கது தெரியாதா?
என் மனம் உன்னைத்தான்
சுற்றியே வருதே தினமே..
உன் குணம் என்னைத்தான்
மயக்கியே செல்லுதே கணமே..
உன் வனம் எனக்காகும்
நாளையே எண்ணி சிலிர்ப்பேன்..
என் வானம் உனக்காக
இருக்குதே வந்தால் துளிர்ப்பேன்..
ஒவ்வொரு நாளிலும் உன் பெயர் எழுதுவேன்
ஒவ்வொரு முறையுமே புது கவிதைகள் தந்து செல்லுதே...
ஒவ்வொரு வேரிலும் உனக்கென பூக்கிறேன்..
ஒவ்வொரு பூவுமே உன் வாசம் தந்து கொல்லுதே..
உன் குரல் கேட்காமல்
உறங்குமா எந்தன் நெஞ்சம்..
உன் விரல் தீண்டாமல்
புலம்புதே எந்தன் மஞ்சம்..
உன் விழி பார்க்கையில்
உயிருக்குள் எழுமொரு அலையே
உன்னை நான் நினைக்கையில்
நனைக்கவே வருதே மழையே
உன்னிடம் என்னவோ எனக்குதான் பிடிக்குதே
உண்மை நான் சொல்கிறேன் இதற்கும் நீ சிரிப்பாய்?
உன்னையே கேட்டுத்தான் இதயமும் துடிக்குதே
உள்ளதை சொல்கிறேன் இப்போதும் புன்சிரிப்பா?
No comments:
Post a Comment